பிரபல யூட்யூபர் ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்பட விமர்சகர் ஆவார். இவர் யாருடைய படமாக இருந்தாலும் கலாய்த்து தள்ளி விடுவார். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் விமர்சனம் செய்து விடுவார். அந்த வகையில் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் இவர் பல சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். கடந்த ஆண்டு கூட ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு எதிராக இருந்த இவரது விமர்சனங்கள் ரஜினி ரசிகர்களை கோபம் அடைய வைத்தது. கொலை மிரட்டல், வெட்டு, குத்து, அடிதடி என பல தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் ப்ளூ சட்டை மாறன் ரஜினி மட்டுமல்லாமல் அஜித் போன்றவர்களையும் உருவ கேலி செய்திருக்கிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனியையும் கலாய்த்திருந்தார். அதாவது ப்ளூ சட்டை மாறன், விஜய் ஆண்டனியையும் ரோமியோ படத்தையும் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு தரமான பதிலடி கொடுத்தார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான மழை பிக்டிக்காத மனிதன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் மில்டன், “விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் அருமையாக நடித்திருந்தார். ப்ளூ சட்டை போட்டு இருந்தா அவர்களுக்கு மட்டும் கண்ணு தெரியாதா என்று தெரியவில்லை. விஜய் ஆண்டனி சின்ன சின்ன எக்ஸ்பிரஷனை கூட அருமையாக வெளிப்படுத்திய படம் தான் ரோமியோ. அதைவிட பல மடங்கு மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருக்கிறார். மேகா ஆகாஷ் – விஜய் ஆண்டனி இருவருக்குமான ரெஸ்டாரன்ட் காட்சி ஒன்று இருக்கிறது. அதனை நான் ரசித்து எழுதினேன். அந்தக் காட்சி மிகவும் அழகாக வந்திருக்கிறது” என்று போற போக்கில் ப்ளூ சட்டை மாறனையும் விமர்சித்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன்.