உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேச அணியை இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இத்தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் மே 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நியூயார்க்கின் நஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் மோதின.
இப்போட்டியில் முதலாவது பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். மற்ற வீரரகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.