Homeசெய்திகள்சினிமாராதிகா வெற்றி பெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்யும் சரத்குமார்!

ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்யும் சரத்குமார்!

-

- Advertisement -

ராதிகா, சரத்குமார் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வருபவர்கள். ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்யும் சரத்குமார்!அதன்படி இருவரும் இணைந்து சூரிய வம்சம், நம்ம அண்ணாச்சி, வானம் கொட்டட்டும் போன்ற பல படங்களை இணைந்து நடிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் இருவரும் தற்போது பல படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். மேலும் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் இவர்கள் இருவரும் அரசியலிலும் ஆர்வமுடையவர்கள். அந்த வகையில் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்யும் சரத்குமார்!அதேசமயம் நடிகை ராதிகா சரத்குமார் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்நிலையில் நாளை (ஜூன் 4) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால் நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என நடிகர் சரத்குமார் விருதுநகர் பராசக்தி அம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

MUST READ