Homeசெய்திகள்சினிமா25 நாட்களை கடந்து வெற்றிப்பயணத்தில் கவினின் ஸ்டார்

25 நாட்களை கடந்து வெற்றிப்பயணத்தில் கவினின் ஸ்டார்

-

- Advertisement -
சின்னத்திரையில் மெகா தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, தற்போது வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு, கவின் நடிப்பில் வௌியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி வெளியான டாடா திரைப்படத்தில் கவினின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றி கவின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

அந்த எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் வகையில் கவின் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் தான் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் கவின் உடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வௌியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 25 நாட்களை கடந்தும் ஸ்டார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சதீஷ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார்.

MUST READ