Homeசெய்திகள்சினிமாபிடி சார் படத்திற்கு வரவேற்பு... மருதமலை முருகன் கோயிலில் படக்குழு தரிசனம்...

பிடி சார் படத்திற்கு வரவேற்பு… மருதமலை முருகன் கோயிலில் படக்குழு தரிசனம்…

-

- Advertisement -
பிடி சார் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மருதமலை முருகன் கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். 
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானார். தனது வாழ்வில் நடந்ததை மையப்படுத்தி இத்திரைப்படத்தை இயக்கினார். ஆரம்ப காலத்தில் ஆல்பம் பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி, தொடர்ந்து சினிமாவுக்கு வந்து முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இதனிடையே அவர் இசை அமைப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். பெரும்பாலான சுந்தர் சி திரைப்படங்களில் ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
மீசைய முறுக்கு படத்தைத் தொடர்ந்து, நட்பே துணை, நான் சிரித்தால், ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, ஆதி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வீரன். இத்திரைப்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிடி சார்.
கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே 24-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கோவை மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

MUST READ