Homeசெய்திகள்இந்தியாவரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் மலர்ந்தது தாமரை... பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி...

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் மலர்ந்தது தாமரை… பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி…

-

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கேரளத்தில் தாமரை மலர்ந்தது.

கேரளாவின் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகரும், வேட்பாளருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திருச்சூர் தொகுதியில் இதுவரை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றிருக்கின்றன. பாஜக கட்சியால் இதுவரை திருச்சூர் தொகுதிக்குள் நுழைய முடிந்ததில்லை. திருச்சூர் மட்டுமன்றி கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது என்பது தான் வரலாறு

ஆனால், இன்று சுரேஷ் கோபியை வைத்து கேரளா எனும் கோட்டைக்குள் நுழைந்தது பாஜக. மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகர் சுரேஷ் கோபியை களம் இறக்கி தீவிர பரப்புரையில் ஈடுபடவைத்து, வெற்றியும் கண்டது பாஜக. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முரளிதரன் மற்றம் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட சுனில்குமார் ஆகியோரை வீழ்த்தி 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

MUST READ