கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
கோவை தொகுதி :
கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ப. ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் கணபதி ப. ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை விவரம்
திமுக – 5,68,200
பாஜக – 4,50,132
அதிமுக – 2,36,490
நாதக – 82,543
அதில் திமுக வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈரோடு தொகுதி :
ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் கே.இ.பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மு.கார்மெகன், தமாகா சார்பில் பி.விஜயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் கே.இ.பிரகாஷ் 4,71,232 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை விவரம்
திமுக – 4,71,232
அதிமுக – 2,72,882
நாதக – 70,789
தமாகா – 66,986
அதில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 1,98,350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருப்பூர் தொகுதி :
ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் சுப்பராயன் (சிபிஐ), அருணாச்சலம் அதிமுக சார்பிலும், முருகானந்தம் பாஜக சார்பிலும், சீதாலட்சுமி நாதக சார்பிலும் களம் கண்டுள்ளனர். அதில் சுப்பராயன் 4,72,739 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை விவரம்
சிபிஐ – 4,72,739
அதிமுக – 3,46,811
பாஜக – 1,85,322
நாதக – 95,726
அதில் திமுக சார்பில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நீலகிரி தொகுதி :
திமுக ( ராஜா ) – 4,73,212
பாஜக (முருகன்) – 2,32,627
அதிமுக (லோகேஷ் தமிழ்ச்செல்வன்) – 2,20,230
நாம் தமிழர் (ஜெயகுமார்) – 58,821
அதில் திமுக வேட்பாளர் ராஜா 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.