Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிக்கும் எம்புரான்... படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்...

மோகன்லால் நடிக்கும் எம்புரான்… படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…

-

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் எம்புரான் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் இதனை இயக்கியிருந்தார். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் நாளுடன் இணைந்து விவேக் ஓபராய் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரித்விராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் லைக்கா நிறுவனம் ‘எம்புரான்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள லூசிபர் 2 படத்தை படத்தை தயாரிக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் துபாயில் தொடங்கிய படப்பிடிப்பு, கேரளா, அமெரிக்கா என மாறி மாறி நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, இறுதியாக சென்னையில் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் அர்ஜூன் தாஸூம் இணைந்துள்ளதாகவும், அவரும் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ