Homeசெய்திகள்சினிமாபுதுச்சேரியில் தக் லைஃப் படப்பிடிப்பு... கமல், சிம்பு மற்றும் அசோக்செல்வன் பங்கேற்பு... புதுச்சேரியில் தக் லைஃப் படப்பிடிப்பு… கமல், சிம்பு மற்றும் அசோக்செல்வன் பங்கேற்பு…
- Advertisement -

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சுமார் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன.

முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம்ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினர். இதனால் துல்கர் சல்மானுக்கு மாற்றாக சிம்புவும், ஜெயம்ரவிக்கு மாற்றாக அசோக் செல்வனும் தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தனர். இந்தி நடிகர்கள் அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சிம்பு, கமல்ஹாசன் மற்றும் அசோக் செல்வன் பங்குபெறும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான துணை நடிகர்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.