Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே போல நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.6,725-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று ஏறியது.

இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து ரூ.98க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54,000 கடந்தது. இது தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ