Homeசெய்திகள்க்ரைம்பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீடிப்பு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீடிப்பு

-

- Advertisement -

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீடிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிடிபட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 1 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 4 ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவை காவல்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று குற்றம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் கள விசாரணை நடத்தினர்.

இன்றுடன் அவருக்கு போலீஸ்காவல் நிறைவடைந்த நிலையில் அவரை பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் காவலை மேலும் 10 நாட்களுக்கு நீடித்து வழங்க காவல்துறை கோரிக்கை விடுத்தனர். பிரஜ்வல் ரேவண்ணாவை  வரும் திங்கட்கிழமை (ஜூ10) வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.  அதை அடுத்து காவல்துறையினர் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவை சி ஐ டி அலுவலகத்திற்கு அழைத்து சென்று மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ