Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணையும் ஜெயம் ரவி பட நடிகை!

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் இணையும் ஜெயம் ரவி பட நடிகை!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன், கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கிய தானே அதைத் தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணையும் ஜெயம் ரவி பட நடிகை! இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் இந்த படத்தை பட குழுவினர் 2024 நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணையும் ஜெயம் ரவி பட நடிகை!இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஏற்கனவே தனுஷின் கொடி, ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக லாக் டவுன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ