Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்

விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்

-

- Advertisement -

தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகள் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு சதவீதங்களை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சி மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?"- சீமான் சரமாரி கேள்வி!

இது தொடர்பாக நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ