- Advertisement -
ஆட்சியமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு
18 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப்பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர் நரேந்திர மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களிலும் வெற்றிப்பெற்றிருந்தது. அதனை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 9ம் தேதி திங்கட்கிழமை நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.