தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ்-இன் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது; ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைக்கு அவரது பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும் இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.