சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை தலைமை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நியாய விலை கடைகளுக்கு போதுமான அளவில் இன்றியமையா பொருட்கள் அனுப்புவது உறுதி செய்யப்பட வேண்டும் எனறும் தணிக்கை அலுவலர்கள் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளவை தரமாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு வரஇயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பொருட்கள் பெறும் முறை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். அத்தகைய அட்டைதாரர்கள் சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.