Homeசெய்திகள்சினிமாநேருவுக்கு பிறகு மோடி..... புகழாரம் சூட்டிய ரஜினி!

நேருவுக்கு பிறகு மோடி….. புகழாரம் சூட்டிய ரஜினி!

-

நடிகர் ரஜினி, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நேருவுக்கு பிறகு மோடி..... புகழாரம் சூட்டிய ரஜினி!ரஜினியின் 170 ஆவது படமாக உருவாக்கி இருக்கும் இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பை முடித்த ரஜினி அபுதாபி, இமயமலை போன்ற இடங்களுக்கு சென்று தனது ஓய்வு நேரத்தில் செலவிட்டார். அதன் பின்னர் சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினி அடுத்ததாக கூலி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூன் 10) அன்று தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டெல்லிக்கு விரைந்தார். அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி. இன்று மாலை 7.15 மணி அளவில் பதவி ஏற்பு விழா புது டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.

நேருவுக்கு பிறகு மோடி..... புகழாரம் சூட்டிய ரஜினி!

இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட சுமார் 8,000 த்துக்கும் அதிகமான பிரபலங்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி டெல்லி செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், “பிரதமர் மோடி அவர்களின் பதவியேற்பு விழாவிற்கு நான் செல்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பதவியை ஏற்பது அவருடைய சாதனை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ