Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.... யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா?

-

- Advertisement -

கடந்த 2016 இல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரெமோ. இந்தப் படத்தை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.... யார் தெரியுமா?மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு , சதீஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். காதல் கலந்த காமெடி கதை களத்தில் வெளியான இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் தான் நடிக்க இருந்தாராம். அப்போது அவரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போது ஸ்ருதிஹாசன் ஒரு சில காரணங்களால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.... யார் தெரியுமா?அதாவது சிவகார்த்திகேயன் போன்ற சின்ன ஹீரோவுடன் எப்படி நடிப்பது என்று அந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசன் மறுத்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தில் தமன்னா கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் தான் நடிக்க இருந்தாராம். பின்னர் பாதி நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

MUST READ