Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா?

உங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா?

-

குழந்தைகள் பொதுவாகவே விளையாடுவதில் ஆர்வம் உடையவர்கள். ஒரு விளையாட்டில் ஒரு குழந்தை ஈடுபடுகிறது என்றால் இந்த குழந்தைக்கு பசி என்பதே தெரியாது. உங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா?தாய்மார்கள் அனைவரும் ஓடி ஓடி தான் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்று வேதனைப்படும் பெற்றோர்களும் இருக்கின்றனர். ஆனால் எடை குறைவு என்பது ஆபத்தான விஷயம் கிடையாது. அதேசமயம் அதிக உடல் எடை இருந்தாலும் அது ஆபத்தான விஷயம். பொதுவாகவே குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றாலும் அவர்களது உடல் எடை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆனாலும் ஆனாலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். நாம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளில் புரதச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடல் எடை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா?அதேசமயம் குழந்தைகளுக்கு நெய், வெண்ணெய் போன்றவற்றை கொடுக்கலாமா? என்று கேட்டால் கொடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பினும் நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவு மட்டுமே வெண்ணெய் அல்லது நெய் கொடுக்க வேண்டுமாம். அத்துடன் பால், முட்டை, மீன் ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்க செய்யும் இனிப்பு பண்டங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இருந்த போதிலும் உங்களுடைய குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தாலும் அல்லது குறைவது போல் தோன்றினாலோ உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

MUST READ