Homeசெய்திகள்சினிமா'SK23' படத்தில் இணையும் டான்சிங் ரோஸ்!

‘SK23’ படத்தில் இணையும் டான்சிங் ரோஸ்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'SK23' படத்தில் இணையும் டான்சிங் ரோஸ்!இந்த படமானது 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது ஆக்சன் நிறைந்த கதைகளத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து படத்தில் வில்லனாக ஏ ஆர் முருகதாஸின் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்திருந்த வித்யூத் ஜம்வால் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 'SK23' படத்தில் இணையும் டான்சிங் ரோஸ்!இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சபீர் கல்லாரக்கல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சபீரின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ