Homeசெய்திகள்அரசியல்பழனிசாமி அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வரவேற்பு

பழனிசாமி அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வரவேற்பு

-

2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுகவின் அறிவிப்பை வரவேற்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பழனிசாமி அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வரவேற்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்த அதிமுக தொடர் தோல்விகளை பெற்று வந்தது. மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணிக்கு முடிவு ஏற்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை நேரடியாக விமர்சிக்க வில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என கூறி இருந்தார்.

பழனிசாமி அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வரவேற்பு

ஆனால் தாம் பாஜக மாநில தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை பதிலடி கொடுத்தார். அதை அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் (apcnewstamil.com)

இதனை தமிழக முழுவதும் அதிமுகவினர் வரவேற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போஸ்டர்கள் போட்டியுள்ளனர்.

MUST READ