Homeசெய்திகள்சினிமாசூர்யா நடிப்பில் உருவாகும் 'கங்குவா'.... எடிட்டிங் பணிகள் தீவிரம்!

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’…. எடிட்டிங் பணிகள் தீவிரம்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகும் 'கங்குவா'.... எடிட்டிங் பணிகள் தீவிரம்!இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பாபி தியோல், நட்டி நடராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படமானது 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.சூர்யா நடிப்பில் உருவாகும் 'கங்குவா'.... எடிட்டிங் பணிகள் தீவிரம்! அதேசமயம் படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து தற்போது எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கங்குவா திரைப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகும் 'கங்குவா'.... எடிட்டிங் பணிகள் தீவிரம்!இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. எனவே இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ