செம்மஞ்சேரி காவல் நிலைய சட்ட ஒழுங்கு பெண் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் சோழிங்க நல்லூர் OMR சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை சோழிங்கநல்லூரில் OMR சாலையில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மகுடீஷ்வரியை கண்டித்து வழக்கறிஞர்கள் சோழிங்கநல்லூரில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆய்வாளர் மகுடீஷ்வரியை உடனே மாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு OMR சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 15 நிமிடங்கள் பரபரபாக காணப்பட்டது.
வழக்கறிஞர்கள் போராட்டத்தால் OMR சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் வேதனையடைந்தனர்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆய்வாளர் மகுடீஸ்வவரிக்கும் அருண் என்ற வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் மகுடீஸ்வரி வழக்கறிஞர் அருணை தரைக்குறைவாக பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் – apcnewstamil.com
இது குறித்து பள்ளிக்கரணை மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி மீது புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை என்பதால் இன்று சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலை ஆவின் பால்பண்ணை சிக்னலில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மகுடீஸ்வரியை காவல் நிலையத்திலிருந்து மாற்றக்கோரி கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.