Homeசெய்திகள்இந்தியாஅமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

-

- Advertisement -

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் , ஆந்திர அரசியலில் அதிரடி மனிதர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பவன் கல்யாணின் முதல் மனைவி நடிகை ரேணு தேசாய் முன்னாள் கணவரின் அரசியல் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

ஆந்திரா சினிமாவில் பவன் கல்யாண் ஜோடியாக ‘பத்ரி, ஜானி‘ படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் பிறந்திருந்தனர். திருமணம் ஆன மூன்றே ஆண்டுகளில் 2012ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

ரேணு தேசாய்

கடந்த 2000ம் ஆண்டில் பிரபுதேவா, பார்த்திபன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த ‘ஜேம்ஸ் பாண்டு’ என்ற படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ரேணு தேசாய் நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே தமிழ்ப்படம் அது மட்டுமே.

கணவர் பவன் கல்யாணைப் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அவரைப் பற்றி ஒருபோதும் விமர்சனம் செய்தது இல்லை. அரசியலில் கணவர் வெற்றி பெற்றதும் அவருடைய மகன் அகிரா நந்தன் வாழ்த்தி பதிவிட்டிருந்ததை ரேணு தேசாய் மறுபதிவு செய்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்….முதல்வன் பட பாணியில் தயாராகும் கதை!

பவன் கல்யாணின் அரசியல் வெற்றிக் கொண்டாட்டங்களில் அவருடைய மகன் அகிரா நந்தன் கலந்து கொண்டார். மேலும் சந்திரபாபு நாயுடுவிடம் மகனை அறிமுகம் செய்து வைத்தார். அகிராவும் நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

MUST READ