இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்தது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அமெரிக்கா அணியானது மோனக் பட்டேல் தலைமையில் களம் கண்டன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சயான் ஜஹாங்கீர் ரன் ஏதுமின்றியும் ஸ்டிவன் டெய்லர் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அண்டிரிஸ் காஸ் 2 ரன்களிலும் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதுமின்றியும் ரோகித் சர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும் ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் களத்திலுள்ளனர். அணியானது 5.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.