Homeசெய்திகள்அரசியல்அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

-

- Advertisement -

தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற வில்லை. இதுகுறித்து பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை, பாஜக – அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 10 முதல்-15 தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருக்க முடியும். அந்த கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று கூறியிருந்தார்.

மேலும் நான் மாநில தலைவராக இருந்த போது எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். கட்சியில் ரவுடிகள், திருடர்கள், மோசடி பேர் வழிகளை கட்சிக்குள் வரவிடாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் இப்போது அப்படியில்லை. கட்சிக்குள் ரவுடிகள் சேர்ந்து கொண்டனர். அதனால் மக்கள் மத்தியில் கட்சியின் மரியாதை குறைந்து வருகிறது. மாநில தலைவர் சரியாகத்தான் இருக்கிறார். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் சரியில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

தமிழக பாஜக தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை என்று இரு கோஷ்டிகளாக பிரிந்து சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்த சண்டை தற்போது அமித்ஷா பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி.நட்டா போன்ற தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மேடைக்கு வந்திருந்த தமிழிசை, மரியாதை நிமித்தமாக அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

அப்பொழுது அவரை அழைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏதோ தமிழிசையிடம் கோபத்துடன் சொல்கிறார். அதற்கு தமிழிசையும் சிறிதும் கோபப்படாமல் பவ்யமாக பதில் சொல்கிறார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அமித்ஷா காட்டமாக பேசுகிறார். இருவரும் பேசிக்கொண்டது சாதாரணமானதாக தெரியவில்லை. அமித்ஷா வின் அருகில் அமர்ந்திருந்தவர்களின் முகத் தோற்றத்தை பார்த்தால் ஏதோ விபரீதமான வார்த்தையில் உரையாடல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அண்ணன் காலில் விழுந்து ஆசி பெற்ற துணை முதல்வர் (apcnewstamil.com)

இதுகுறித்து கேரளா காங்கிரஸ் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொது மேடையில் இப்படியா கண்டிப்பது? பாஜக பெண்களை எப்படி இழிவான முறையில் நடத்தும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் இத்தகைய அவமானங்களை தாங்கிக்கொள்ள கூடாது.

உடனே பதிலடி கொடுத்து விட்டு பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்று கேரளா காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.

தமிழக பாஜகவில் என்னதான் நடக்கிறது என்று மேலிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ