Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழத்தை எத்திலீன் ரசாயனத்தால் பழுக்க வைத்து விற்பனை செய்த 6 கடைக்கு சீல்!

கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழத்தை எத்திலீன் ரசாயனத்தால் பழுக்க வைத்து விற்பனை செய்த 6 கடைக்கு சீல்!

-

கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழத்தை எத்திலீன் ரசாயனத்தால் பழுக்க வைத்து விற்பனை செய்த 6 கடைகளுக்கு அங்காடி அலுவலர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகளிடையே புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 10ம் தேதி முதல் பழ மார்க்கெட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 3வது நாளான நேற்றும் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, எத்திலீன் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனை செய்த 6 கடைகளுக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் ₹30 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கைகளை முதன்மை அங்காடி நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என இவ்வாறு தெரிவித்தனர்.

MUST READ