Homeசெய்திகள்சினிமாதவெக தலைவர் விஜய் பிறந்தநாள்... தங்கத்தேர் இழுத்த புஸ்ஸி ஆனந்த்...

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள்… தங்கத்தேர் இழுத்த புஸ்ஸி ஆனந்த்…

-

- Advertisement -
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புஸ்ஸி ஆனந்த், தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.

 

கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அண்மயைில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து, அரசியல் போர்க்களத்திற்கு தேவையான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் வரும் 18-ம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். மேலும், விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்த அப்டேட் அவரது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி தவெக கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய் அரசியல் கட்சியை அறிவித்த பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், எதிர்பார்ப்பு எகிறி வருகிறது

MUST READ