Homeசெய்திகள்சினிமாதிருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் சாமி தரிசனம்

திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் சாமி தரிசனம்

-

நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
 தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வரும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். அவரது திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை. இப்படத்தின் வெற்றி அவரை முன்னனி நாயகியாக உயர்த்தியது. இதையடுத்து, வட சென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை, கனா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

கமர்ஷியல் நடிகையாக இல்லாமல், சிறந்த மற்றும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகையாக அவர் உருவெடுத்தார். ஃபர்ஹானா, தீராத காதல், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பனசுந்தரி, டியர் உள்பட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து அவரது நடிப்பில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, வளையம், சிஸ்டர் ஆகிய படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.
மேலும், பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்ட ரசிகர்கள், செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். கேமராவைப் பார்த்ததும் வெட்கப்பட்டு தலைகுணிந்த ஐஸ்வர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ