Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீர் டுவிஸ்ட்...தமிழிசையை சந்தித்த அண்ணாமலை....!முடிவுக்கு வந்ததா உட்கட்சி பூசல்?

திடீர் டுவிஸ்ட்…தமிழிசையை சந்தித்த அண்ணாமலை….!முடிவுக்கு வந்ததா உட்கட்சி பூசல்?

-

- Advertisement -

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் வெற்றி பெற்றது. பாஜக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. பாஜகவின் இந்த தோல்விக்கு தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது ஆந்திர மாநில புதிய அரசு பதவியேற்பு விழாவிலும் எதிரொலித்தது. பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழிசையை கண்டிக்கும் விதமாக பேசி இருந்தார். இது உட்கட்சி பூசலை மேலும் உறுதிப்படுத்தியது.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சென்றுள்ளார். அங்கு அண்ணாமலை தமிழிசை சௌந்தராஜனை சந்தித்து பேசியுள்ளார். தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் பெரும் பேசுபொருளாக மாறி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜனுடன் சந்தித்து பேசியுள்ளார்.

MUST READ