மீன் பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்த நாளில் ராமநாதபுரம் அருகே விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன். இவர் தனது சொந்தமான விசைப்படகில் மீனவர்களுடன் நேற்று அதிகாலை 5 மணியளவில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கடற்கரையிலிருந்து 6 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அவர்களது விசைப்படகில் ஏற்பட்ட பழுதின் காரணமாக படகானது கடலில் மூழ்கியுள்ளது. இதில் செய்வதறியாமல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரசாந்த் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சக மீனவர்கள் இவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதில் கடலில் மூழ்கி மாயமான பரக்கத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம் ஆகிய மூன்று பேர் கடலில் மூழ்கியதில் இதில் பரக்கத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாயமான கலீல் ரகுமானைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தகவல் அறிந்த கடலோரக் காவற்படையினர் மீனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் உயிரிழந்த மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கரையில் காத்திருந் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.