Homeசெய்திகள்சினிமாஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதே சமயம் மோகன் தாஸ், ஆர்யன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இன்னும் இயக்குனர் கோகுல் மற்றும் இயக்குனர் செல்லா அய்யாவு ஆகியோரின் இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் விஷ்ணு விஷால், அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது விஷ்ணு விஷால் தான் தயாரிக்கப் போகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் வலம் வருபவர். இவ்வாறு பன்முகத் திறமைகளை கொண்ட இவர் கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களையும் லேபிள் என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ