Homeசெய்திகள்சினிமாசர்வதேச தந்தையர் தினம்... நயன்தாரா வெளியிட்ட பதிவு வைரல்...

சர்வதேச தந்தையர் தினம்… நயன்தாரா வெளியிட்ட பதிவு வைரல்…

-

சர்வதேச தந்தையர் தினத்தை ஒட்டி நடிகை நயன்தாரா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

இது தவிர இந்த நட்சத்திர தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். இதுமட்டுமன்றி, லிப் பாம் கம்பெனி, டிவைன் புட்ஸ், நயன் ஸ்கின் என பல தொழில் நிறுவனங்களையும் தொடங்கி இருக்கின்றனர். அண்மைக் காலமாக நடிப்பு, தொழில் மட்டுமன்றி குடும்பத்தினருடனும் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். அடிக்கடி குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அண்மையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் தாய்லாந்து மற்றும் ஹாங்காங் சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகின. இந்நிலையில், இன்று சர்வதேச தந்தையர் தினத்தை ஒட்டி, உயிர் மற்றும் உலக்குடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார். இது டிரெண்டாகி வருகிறது.

MUST READ