Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

சென்னையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

-

செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளது.

சென்னையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள்,   ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ