திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியுள்ளது. மேலும் சுமார் 200 மீ தூரம் அந்த பெண்ணை மாடு தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் எருமை மாட்டை விரட்ட முற்பட்டுள்ளனர் ஆனால் ஆக்ரேஷமாக இருந்த எருமை மாடு பொதுமக்களை விரட்ட தொடங்கியது. மேலும் அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்களையும் எருமை மாடு சேதப்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்ட மதுமதி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடது தொடையில் இருப்பதுக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி என்பவர் எருமை மாடு இடமிருந்து மது மதியை காப்பாற்றியுள்ளார். மாடு ஆக்ரோஷமாக விரட்டி தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.திருவொற்றியூரில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்துவிட்டதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.