நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் சார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது விரைவில் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் விமல் இயக்குனர் எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த 2013-ல் எழில், விமல் கூட்டணியில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் தேசிங்கு ராஜா 2 படமானது முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தை போல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா போன்றோர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வித்யாசாகர் படத்திற்கு இசையமைக்கிறார். ஆர் செல்வா படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.