நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஹீரோவாக உருவெடுத்து மெரினா படத்தில் களம் இறங்கினார். மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். காக்கி சட்டை,டாக்டர், மாவீரன், அயலான் போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாகவும் நடித்து பெயர் பெற்றார். இவர் தனது கலகலப்பான பேசினாலும் திறமையான நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களை, குறிப்பாக குழந்தை ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க படமானது சில தினங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, விநாயக் சந்திரசேகரன் ஆகிய இயக்குனர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குழந்தைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -