Homeசெய்திகள்சினிமா'தேசிங்கு ராஜா 2' படத்தின் கதை இதுதானா?...... இயக்குனர் எழில் சொன்ன தகவல்!

‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் கதை இதுதானா?…… இயக்குனர் எழில் சொன்ன தகவல்!

-

கடந்த 2013 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் எழில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தேசிங்கு ராஜா. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சூரி, ரவி மரியா போன்றோரும் நடித்திருந்தனர். 'தேசிங்கு ராஜா 2' படத்தின் கதை இதுதானா?...... இயக்குனர் எழில் சொன்ன தகவல்!காமெடி கலந்த கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் எழில். இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து ரோபோ சங்கர், குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வித்யாசாகர் படத்திற்கு இசையமைக்கிறார். 'தேசிங்கு ராஜா 2' படத்தின் கதை இதுதானா?...... இயக்குனர் எழில் சொன்ன தகவல்!கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன் பின் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான சில தகவல்களை இயக்குனர் எழில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகமான காமெடிகள் இருக்கும். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியான கதை இல்லை என்பதால் சூரி இந்த படத்தில் இருக்க மாட்டார். நகரப்புற பின்னணியில் படமாக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு
நேற்று நிறைவடைந்தது. மூன்று நண்பர்களை சுற்றிய கதைதான் இந்த படம். 'தேசிங்கு ராஜா 2' படத்தின் கதை இதுதானா?...... இயக்குனர் எழில் சொன்ன தகவல்!அதாவது இரண்டு இளைஞர்கள், ஒரு பெண் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே நண்பர்கள். அதன் பின்னர் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். பல நாட்கள் கழித்து மூவரும் சந்திக்க நேரிடுகிறது. அதில் அந்தப் பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். மற்றொரு நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மூன்றாவது நண்பர் ரௌடியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ