சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மின்னஞ்சல் மூலம் மருத்துவமனைக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டை தேடும் பணிகளும் நடைபெற்றது.
பின்னர் நடந்த சோதனையில் சந்தேகத்துக்கு உரிய வகையில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய போது மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் (apcnewstamil.com)
மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.