நேபால் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் நேற்றிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நேபால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வங்காளதேச அணி நஜ்மூல் ஹசன் தலைமையிலும் நேபால் அணியானது ரோகித் பவுடேல் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள ஆலன் வாலே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நேபால் அணியின் கேப்டன் ரோகித் பவுடேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வங்காளதேச அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சிட் ஹசன் ரன் ஏதுமின்றியும் லிட்டன் தாஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சகிப் ஹல் ஹசன் 17 ரன்கள் எடுத்தால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நேபால் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குஷால் பர்டேல் 4 ரன்களிலும் ஆஷீப் சீக் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக குஷால் மாலா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பின்னர் வங்காளதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் தன்சன் ஹசன் சகிப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.