Homeசெய்திகள்சினிமாஉமாபதியை கரம்பிடித்த ஐஸ்வர்யா... மகளுக்கு 500 கோடி வரதட்சணை கொடுத்த நடிகர் அர்ஜுன்... உமாபதியை கரம்பிடித்த ஐஸ்வர்யா… மகளுக்கு 500 கோடி வரதட்சணை கொடுத்த நடிகர் அர்ஜுன்…
- Advertisement -
கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தடம் பதித்தார். அதைத்தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதில் சேரன் இயக்கி நடித்த திருமணம் படத்தில் உமாபதியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் பித்தல மாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி இருக்கிறது.
இதனிடையே, உமாபதியும், அர்ஜூனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு வீட்டார் முன்னிலையில் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 10-ம் தேதி ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், உமாபதி ராமையாவுக்கும் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு சுமார் 500 கோடி ரூபாயை வரதட்சணையாக வழங்கி இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அர்ஜூனுக்கு சென்னை போரூரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும், கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றையும் மகளுக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.