Homeசெய்திகள்க்ரைம்கார் விபத்து - ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

-

- Advertisement -

 

 

கார் விபத்து - ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்

போலீஸார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பி பீடா மஸ்தான் ராவ்-ன் மகள் பீடா மாதுரி என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் இவர் பாண்டிச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை ஆஜராகுமாறு பீடா மாதுரியை அழைத்துள்ளனர்.

காவல் நிலையம் வந்து சரணடைந்த பீடா மாதுரியை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

MUST READ