Homeசெய்திகள்சினிமாமின்னல் வேகத்தில் 50 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!

மின்னல் வேகத்தில் 50 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

-

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த், பாரதிராஜா ஆகியோரின் கூட்டணியில் குரங்கு பொம்மை எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.மின்னல் வேகத்தில் 50 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'! அதைத் தொடர்ந்து 6 வருடங்கள் கழித்து நித்திலன் சாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கினார். அதன்படி நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் தான் மகாராஜா.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அஜனிஸ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இதில் விஜய் சேதுபதி தவிர பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், அபிராமி போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் விஜய் சேதுபதிக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் சமீபத்தில் 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். பக்ரீத் விடுமுறை நாட்களும் படத்தின் வசூல் அதிகரிக்க பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. மின்னல் வேகத்தில் 50 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!இந்நிலையில் இந்த படம் குறைந்த நாட்களில் உலகம் முழுவதும் 40க்கு கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்துள்ளது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் படத்தின் வசூலும் அதிகரித்து வருவதால் விரைவில் இந்த படம் 50 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ