Homeசெய்திகள்சினிமாகமலுக்கு பிடித்த பைக்... நடிகர் அப்பாஸ் சொன்ன தகவல்...

கமலுக்கு பிடித்த பைக்… நடிகர் அப்பாஸ் சொன்ன தகவல்…

-

 
1990-களில் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் நினைவுக்கு வரும் அளவு அவரது முகம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் பதிந்துபோனது. இவர் தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். 1996-ம் ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பா படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரது திரையுலகில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்
அதேபோல, கமல்ஹாசனுடமும் இணைந்து அவர் நடித்திருக்கிறார். பம்மல் கே.சம்பந்தம் திரைப்படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக அப்பாஸ் நடித்திருப்பார். காமெடி கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் பெரும் ஹிட்டாக அமைந்து, ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. அத்துடன் இன்றுவரை இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் உள்ளனர்
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் அப்பாஸ், கமல்ஹாசன் ஒரு பைக் பிரியர் என்று தெரிவித்துள்ளா். ஆக்லாந்தில் உள்ள பைக் ஷோரூம் ஒன்றிருக்கு சென்றபோது அங்கிருந்த பிஎஸ்ஏ வகை பைக்கை கண்டு ரசித்ததாகவும், இது கமலுக்கு மிகவும் பிடித்தமான பைக் என்ற ருசிகர தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

MUST READ