Homeசெய்திகள்சினிமா'SK23' படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

‘SK23’ படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.'SK23' படத்தின் டைட்டில் குறித்த தகவல்! இவர் தற்போது சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றையும் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் 23 வது படமான இந்த படத்திற்கு SK23 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இப்படம் ஏ ஆர் முருகதாஸின் முந்தைய படங்களை போல் ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் தயாராகி வருகிறது. மேலும் இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர். 'SK23' படத்தின் டைட்டில் குறித்த தகவல்!இவ்வாறு ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் படத்தின் தலைப்பு தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ