Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..

கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசின் அலட்சியமே இத்தகைய சம்பவத்திற்கு காரணம் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவரிசையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ