கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ள நிலையில், 165 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி (apcnewstamil.com)
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து “நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “எந்த மது மதி மதி மறக்க செய்கிறதோ அதே மது தான் மரிக்க செய்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், இறப்பின் காரணம் எதுவாயின் இறங்கத்தான் வேண்டும். சாராய சாவுகளுக்காகவல்ல சந்ததிகளுக்காக” என்று தனது பதிவில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.