Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர்

கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர்

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும் என்றும் அதனடிப்படையில் இந்த சம்பவத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையுடன் சேர்த்து கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை கல்வி கட்டணம் மற்றும் அவர்களின் விடுதி செலவை அரசை ஏற்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ. 5,000 வழங்கப்படும் எனவும் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர்

குழந்தைகள் 18 வயது நிறைவடைந்த உடன் வட்டியுடன் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். மேலும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் பைப்பு நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

பெற்றோரில் ஒருவரையோ இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச்செலவை அரசை ஏற்றுக்கொள்ளும். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! (apcnewstamil.com)

குறிப்பாக அவர்கள் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

MUST READ