நடிகர் பிரபுதேவா தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மூன் வாக், ஜாலியோ ஜிம்கானா, லைப் இஸ் பியூட்டிஃபுல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையில் இவர் பேட்ட ராப் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ரியாஸ் கான் போன்றோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க எஸ் ஜே சினு படத்தை இயக்கியுள்ளார். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜித்து தாமோதர் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டான்ஸ் சம்பந்தமான கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் அந்த டீசரை முடிவில் படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.