கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்2…. டிரைலர் அறிவிப்பு இதோ…
- Advertisement -
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். பிரம்மாண்ட இயக்கத்திற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கர் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. அண்மையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றபடி ஒவ்வொரு நாளும் படக்குழு ஒவ்வொரு விதமான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஜூன் 25-ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகிறது.